சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை----25-9-2018

உன் நினைவில் என் இரவுகள்
உறங்காத கண்களுடன்
உருகி நான் நிற்கிறேன்
உன் காதல் நினைவால்
என் ஏக்கமான இரவுகளில்
இருள் எனும் போர்வையில்
இடர் படும் என் உறக்கத்தை
அமைதியாக்க நீ எழுந்துவா
அருகிருந்து தூங்க வைக்கவா
கண்ணியம் மிக்கவளே
கருணையில் பெரியவளே
காட்சி தந்து நம்காதலுக்கு
சாட்சி சொல்ல வந்துவிடு
மெய்யெலாம் துடிக்குதே
மென் மனம் பதறுதே
தூக்கம் இழந்து தவிக்கிறேன் உன்
துணையை நாடி நிற்கிறேன்
துன்பத்தைப் போக்கி
இன்பத்தைத் தேக்கிட என்
இரவுகளை முழுமையாக்க
எழுகதிராய் எழுந்துவா நீ
சரஸ்வதிராசேந்திரன்
Image may contain: 3 people, including Ranjini Chandramohan and Saraswathi Rajendran, people smiling
Comments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக