சனி, 29 செப்டம்பர், 2018

7-9-2018

சித்திரமே சொல்லடி
சித்திரமே சொல்லடி சிந்தையிலே என்னடி
நித்தம் நித்தம் என்னை சீண்டுவதேனடி
பித்தம் கொண்டு தினம் அலையுறேண்டி
முத்திரையைக் காணாம சித்தம் ஆறாதடி
ஏக்கங்கொண்டு நான் இப்படியே இருந்திடலாமோ
ஊக்கங்கொண்டு உண்மையை முன்வந்து உரைத்திடு
தூக்கம் கெட்டுப்போய் கெஞ்சுதடி கண்களும்
தாக்கம் அதிகம்தான் தங்கமே உன்னால
சின்னஞ்சிறு சிரிப்பிலே சிதைச்சுட்டே இதயத்தை
சின்னா பின்னமாகிப் போச்சு சின்னவனின் நினைப்பும்
ஆசையோடு கெஞ்சுறேனே அடகு வச்சஎன் மனசை
மீசைவச்ச ஆண்பிள்ளைதான் மீட்கமுடியாம தவிக்கிறேன்
ஊருக்குள்ளே என்னைப்போல அழகனுண்டா சொல்லு
பேரும் புகழும் உடைய பெரியமனசுக்காரன் நம்பு
திடமான மனசுக்குள்ளே தென்றலா நீ நுழைஞ்சே
திண்டுக்கல் பூட்டுப் போட்டு பூட்டி வச்சேன் நானே
கூறாம சந்நியாசம் போக வைக்காதடி மானே
ஆறாதுடி என்னைப் பெத்தவங்க மனசு
பார்த்தது போதும் வந்து காத்திடவேணும்
பாவையே இன்றெனக்கு பதில் சொல்லியே ஆகணும்
பாடுபட்டு சேர்த்ததெல்லாம் நீயும் நானும் வாழத்தான்
பாக்கு வெத்திலை மாத்தத்தான் நல்ல சேதி சொல்லு
பரிசம் போட வாரேன் பதிலை நீ சொல்லிப்போடி
பதைக்கிறது உயிரு உன் பதிலுக்காக காத்து
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக