சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை--26-6-18

மாலைநேரத்தென்றலும்மனதை வருடும் காதலும்
இரும்பில் ஏறும் துருவாக
இதயம் புகுந்து அரிக்கின்றாய்
நினைவின் அடுக்கில் உன்முகமே
நீங்காமல் நிலையாய் நிற்கிறது
கொடிபோல் காதல் படர்ந்தே
செடியாய் வளர்ந்து நிற்கிறதே
பாழாய் போன மனதிங்கே
தானாய் கிடந்து தவிக்கிறதே
மாலை நேரம் வந்தாலே
மனதில் இன்பம் கூடிடுதே
சோலைக் குயிலாய் கூவிடுதே
சோடியைத் காணாது தவிக்கிறதே
கண்ணில் கொடி வளர்த்து
காதல் மலரைப் பறித்து
பெண்ணே உன் கூந்தலில் முடிக்க
மன்னவன் நான் வரலாமா ?
சும்மா கிடந்த சங்கை நீ
ஊதிக்கெடுத்தாய் நன்றோ சொல்
போகிற போக்கில் வீசிவிட்டாய்
பொல்லாப் பார்வையால்பரிதவிக்கிறேன்
மாலை நேரத் தென்றலும்
மனதை வருடும் காதலும்
மங்கை உனைத்தேடி அலைகிறது
மணந்தால் நீ இல்லையேல் மரணதேவன்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக