சனி, 29 செப்டம்பர், 2018

நுட்பம் --23-7-18

கண்ணுக்கு மை அழகு
கண்ணுக்கு மை அழகு
பெண்ணுக்கு நாணம் அழகு
பறவைக்கு இறக்கை அழகு
உறவுக்கு உண்மை அழகு
கடலுக்கு அலை அழகு
மடலுக்கு வார்த்தை அழகு
பயிருக்கு பசுமை அழகு
உயிருக்கு உடம்பு அழகு
மலருக்கு இதழ் அழகு
சிலருக்கு முகம் அழகு
கவிதைக்கு பொய் அழகு
காதலுக்கு ஊடல் அழகு
மயிலுக்குத் தோகை அழகு
குயிலுக்கு குரல் அழகு
வானுக்கு நிலவு அழகு
மானுக்கு புள்ளி அழகு
காட்டிற்கு மரங்கள் அழகு
நாட்டிற்கு நல்லதலைவன் அழகு
பாட்டிற்கு பொருள் அழகு
வீட்டிற்கு நல்ல மனைவி அழகு
சிப்பிக்கு முத்து அழகு
சிந்தைக்கு நிம்மதி அழகு
மழலைக்கு மொழி அழகு
மனிதனுக்கு மனித நேயம் அழகு
வாய்மைக்குத் தூய்மை அழகு
வாழ்க்கைக்கு நேர்மை அழகு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக