சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை--ஜூலை 13

வாழ்க்கைச்சுமை
தாலி கழுத்தில் ஏறியதும் ஆரம்பிக்கும்
தாயின் சுமைகள் தொடரவே வாழ்வாள்
சுமைகளை நாளும் சுகமாய் ஏற்பவள்
சுமந்தே சுமைக் கல்லாய் ஆனவள்
அமைதி அடைந்தே அழகுடன் வாழ
அடையும் சுமைகளை பெரிதாய் எண்ணாள்
கொட்டும் மழையிலும்சுட்டெரிக்கும் வெயிலிலும்
வீட்டுவேலைச் சுமையை ஒருத்தியே சுமப்பாள்
பத்துத்திங்கள் குழந்தை பாரம் சுமப்பாள்
படுத்தும் மசக்கையையும் மகிழ்ந்தே சுமப்பாள்
பிள்ளையை வளர்த்து ஆளாக்கும் சுமை
உள்ளக் குமுறலில் வேதனை சுமையாய்
பாசமும் நேசமும் பாபமாய் ஆகிடும்
ஆசை பரவி அலைத்திடும் யாவுமே
வீசிய பொருளாய் விழுவாள் பிள்ளையாள்
வாசம் மட்டும் போகாது சுமப்பாள் அதையும்
சுமைகளை நாளும் சுகமாய் ஏற்பாள்
ஆமைபோல் சுமைகளை உள்ளிருத்தி வாழ்வாள்
ஊமையாய் உள்ளுக்குள் குமைந்தாலும் காட்டாமல்
உயிர் இருக்கும்வரை உவந்தே சுமப்பாள்
நோய் வந்து பாயில் படுத்தாலும் குடும்பத்தின்
தாயாய் சுமைகளைத் தள்ளிவைத்து விட்டு
பாய்ந்தளித்துக் காப்பாள் பாசமில்லா மனங்களையும்
ஓய்ந்தாலும் சாய்ந்தாலும் அலைகளைப்போல்ஓய்வதிலை சுமைகள்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக