சனி, 29 செப்டம்பர், 2018

தமிழமுதுகவிச்சாரல்---18-8-18

அலைமோதும் உள்ளம் (சமூகம் )

அலைமோதும் உள்ளம் ஆட்டிப் படைக்கும்
நிலைகுலையச்செய்து நிம்மதி தொலைக்கும் 
தொலைந்த நிம்மதியால் தொடரும் கேடுகள்
கலையும் வாழ்வெனும் வசந்த கூடு
நிலையில்லா உலகத்தில் நின்றுலாவும்
அலைபோல் ஆசைகள் அடங்காது என்றும்
வலைப்படும் ஆசை விடுதலை ஆகா
நிலையருள் நிற்கா விடின்
அடங்கா ஆசையை அடக்கா விட்டால்
அழிந்தே போகும் அமைதி வாழ்க்கை
குணங்கள் அழித்தே பணம்மட்டும்சேர்த்தால்
தினம் கெட்டுப் போகும் திசை மாறிடும்
மனமதின் சுத்தமே மகிழ்வான வாழ்வு
மதி கெட்டு வாழ்ந்தால் கதியற்றுப்போகும்
இருப்பதைக் கொண்டு பொறுப்புடன் வாழ்ந்திட
பறப்பதை நிறுத்தி பக்குவம் பெற்றிடு
துறந்திடும் வாழ்வில் சிறந்திடும் அன்பு
பிறப்பின் பயன் உணர்ந்து பண்பாய் நட
நிகழ்வின் வாழ்வில் நிம்மதி கொண்டு
நின்று நிதானித்து உயர்வை அடைந்திடு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக