சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை

தமிழ் சேவை உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
09.05.2018 அன்று நடைபெற்ற
           
#காவிய_களஞ்சியம்
போட்டியில் 
          
#கவி_வள்ளல்_காரி
 🍀 🍀 🍀 🌳 🌳 🌳 🌳 💮 💮 🍁 💮 💮 🌼
என்ற தலைப்பிற்கு கவிதை படைத்த
அனைவருக்கும் வாழ்த்துகள்
கவி வள்ளல் காரி
முள்ளுக்கொடிகள் படர்ந்த மலையாம்
முள்ளூர் மலையின் தலைவனாம் காரி
வீரத்திலும் ஈரத்திலும் நிகரில்லாதவன்
ஓரத்திலேகூட குறை மனம் இல்லாதவன்
பாலின பேதமின்றி கல்வியறிவு பெற்றுத் திகழ
பலரும் பயன்படும்படி கல்விக்கூடம் அமைத்தான்
பாரியைப் போலவே புலவருக்கெல்லாம் காரியும்
வாரிக் கொடுததவன் தேரையும் ஈந்தவன்
கொடையாலும் படையாலும் பிறருக்குதவி
பெரும் புகழை எய்தியவன்புறநானூற்றில்
இடம் பெற்றவன் இரவலருக்கும் ஈய்தவன் காரி
ஈரநெஞ்சனாய் நிகரில்லா புகழ் பெற்றவன்
நண்பன் கிள்ளிக்காகப் போராடி வெற்றிதந்தவன்
சேரன் சோழன் பாண்டியனுக்கும் உதவியவன்
மூவேந்தர்கள் வெகுமதியாய் வழங்கியபொருட்களை
மிச்சமில்லாமல் ஏழை எளியவருக்குவாரித் தந்தவன்
இரும்பொறை அதியமானையும் வென்று
இழுத்துக்கொண்டான் அவன் நாட்டையும்
பஞ்சகல்யாணி குதிரை ஏறி செந்நிறவாளால்
பகைவர்களை வெட்டி வீழ்த்திய காரிவீரத்திலும் ஈரத்திலும்ஒளிர்கிறான்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக