சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை---1-8-2018

அன்னம் அளாவிய தமயந்தி
நீண்ட நெடுந்தோள் கொண்ட
நிடத மன்னா வீர்ப்பிறப்பே
வெற்றிச்சிறப்பின் மொத்த உருவே !
அழகில் மன்மதனே உன்
அழகுக்கேற்ற ரதி தமயந்தியே
என் உள்மனம் கூறுகிறது உண்மையை
விதர்ப்ப தேசத்து இளவரசியின் அழகை
விவரிக்கிறேன் கேள் மன்னா
பகுத்துப் பார்த்தால்
பெண்ணுக்கே உரிய நால்வகை
குணங்களும் நால்வகைப்படையாக
காவல் நிற்கும் பேரழகி
வேலையும் வாளையும் ஒக்கும்
வேல் விழியாளின் கூர்மை
பறவைகள் எழுப்பும்
காற்றைக்கூடத் தாங்காதுஅவளது
சிற்றிடை வளையும்
காலின் சிலம்பு முரசுபோல்
ஒலிக்கும் அன்னமான
எங்களின் நடையை
தோற்கடிக்கும் நடையழகு அந்தப்
பேரழகுப் பெட்டகத்திற்கு ஏற்ற
கட்டழகன் நீயென்றால் மிகையில்லை
நிடத மன்னா கடமைஇதுசொல்லிவிட்டேன்
தமயந்தியிடம்
நிடத நாட்டு மன்னன்
நின் மனதுக்கேற்ற துணைவன்
கொண்டாடும் தொண்டுள்ளம்
திண்டாடவைக்கும் அறிவுசெறிவு
பரந்த தோளும்
புஜபலபராக்கிரமும்கொண்டவன்
கல்போல் உறுதி கனிபோல் கனிவு
கனிந்த என் கணக்கு
உன் பேரழகுக்கு தந்த கட்டழகன் அவனே
பொன்னை பெட்டியில் பூட்டுதல்போலே
அவனிடம் மனதை எடுத்துவை தமயந்தி
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக