சனி, 29 செப்டம்பர், 2018

14-6-18 புதியதொரு வாழ்க்கை

அத்தநெனைப்பில்
காத்திருக்கேன் தோப்புக்குள்ளே……
அத்த மகள் உன் நெனைப்பில்
காத்திருக்கேன் தோப்புக்குள்ளே
ஆலமர விழுதிருக்கு
ஆடிக்காலப் பொழுதிருக்கு
ஆசையிலே காத்திருக்கேன்
ஆளில்லா நேரத்திலே
வாடிப் போக விடாம
வந்து விடு மச்சானே
உனக்கான மனசு இது
மனசுக்குள்ள மொத்த இடமும்
மச்சானே உனக்குத்தான்
ரசப்பி நின்னு உசுப்பிவிடாதே என்னைத்தான்
நீ பேசும் பேச்சுக்காக
என் நேசம் காத்திருக்கு
உனக்காக என் கண்ணு
உறங்காமல் விழிச்சிருக்கு
தோப்புக்குள்ளே குயிலிரெண்டு
தோள் உரசி கொஞ்சுது
அதைப் பார்த்த நெஞ்சுக்குள்ளே
உன் நெனப்புத்தான் மிஞ்சுது
வெள்ளை மனசு மச்சானே
விரசா நீயும் வந்திடு
மனசு கிடந்து துடிக்குது
உன்னை இங்கு அழைக்குது
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக