சனி, 29 செப்டம்பர், 2018

கவியுலகபூஞ்சோலை--11-6-18

தடம் மாறும் வாழ்க்கை
தவறான உறவில்
தடம் மாறிய தாய்
தப்பாய் பெற்றெடுத்த
தப்பான குழந்தையை
குப்பையில் வீசினாள்
பாவமறியா குழந்தை இன்று
குப்பைக் கிடங்குகளில்
கோணிப் பையும்
கிளறும் குச்சியும்
மூலதனமாய்க்கொண்டு
எச்சில் உணவில்
மிச்சம் உண்டு தெருஓரம்
தடம் மாறிய தாயால்
தடம் மாறிய வாழ்க்கை சேய்க்கு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக