சனி, 29 செப்டம்பர், 2018

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா --12,13-7-18

சாயாங்கால பொழுதிலே
கலப்பையையும் ஏரையும் ஓரம் கட்டியாச்சு
கவலையாலே எங்க மனம் பாரமாகிப்போச்சு
வெள்ளனவே எழுந்து நாங்க சுறு சுறுப்பா போவோம்
வயக்காட்டை சுத்தி வந்து வயித்துப்பாட்டைபார்த்தோம்
வயலையும் வித்தாச்சு இப்போ
வயத்துப் பாடும் காஞ்சுபோச்சு
பழக்கமில்லா வேலைக்குப்போயிஉடல் வலியால்
வழக்கமா குடிக்கவும் ஆரம்பிச்சாச்சு
சித்தாளு வேலையின்னா சும்மாவா
மொத்த சுமையும் தலையிலே அம்மாடி
பகல் முழுதும் வேலையிலே பஞ்சம்போகுது
பாடுபட்டு உழச்ச காசு பாதி குடிக்குப்போகுது
ஏற்கெனவே வயல்போயி வாடி நிற்கிறோம்இதிலே
எட்டு வழிச்சாலை வந்தா இருக்கிற குடிசைபோகும்
கும்பி கழுவ வழியில்லாம குழம்பி கிடக்கிறோம்
நம்பி நம்பி ஓட்டைப்போட்டு வீணாப்போகிறோம்
பாட்டன் பூட்டன் காத்துவந்த விவசாயம் போச்சு
போக்கத்த வாழ்வையெண்ணிஅழுது கண்ணீரும் வறட்சியாச்சு
அழிஞ்சு போகும் இனமுன்னு விலங்கை பாதுகாக்கிறான்
அழிஞ்சு போற எம் உழவன் கண்ணுக்குத் தெரியலையே
சாயங்கால பொழுதிலே மயங்கி கிடக்கோம் போதையிலே
தாயா எங்க இனத்தை காத்திடவே வாங்க சாகவிடாம
விதை மட்டும் போகலைங்க விளை நிலமும் போச்சு
கதைவிடற கார்ப்பரேட்டுக்காரனாலே சோத்துக்கு நாளை கையேந்தபோறவங்களும் நீங்கதான்உணர்ந்துகொள்ளுங்க
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக