சொல்லாமல் தவிக்கின்றேன்
முதன் முதலாக பார்த்த போதே
முத்திரையாய் பதிந்து. விட்டாய் நெஞ்சில்
பத்திரமாய் பாதுகாத்தேன் பாவை உன்னை
சித்திரமே. சிந்தை அறிந்து வாடி
நித்திலமே நீயின்றி நிம்மதி இல்லை
சுத்தமான. மனசு இது களங்கமில்லை
மெத்தனமா இருந்து என்னை வாட்டாதே
சத்தியமா. நீயின்றி எனக்கு வாழ்வில்லை
சொல்லாமல். தவிக்கிறேன் சுயமாக நானில்லை
கொல்லாதே விழியாலே என்னை மெல்லாதே
மெல்லியலாள் உன் விருப்பம் தெரியாதலால் நானும்
சொல்லாமல் தவிக்கிறேன் என் காதலை
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக