சனி, 29 செப்டம்பர், 2018

கவிதை மணி

முகப்பு ஸ்பெஷல்ஸ் கவிதைமணி 18-6-2018
மிச்சத்தை மீட்போம்:

விளை நிலத்தை விலை நிலமாக்கியாச்சு
விவசாயத்தை ஒழித்துக் கட்டியாச்சு
தனியார் மயம் ஊர்கள் மயம்
தாராளமயம் உலக மயம்னு வந்தாச்சு
பாரம்பரிய பண்புகளை ஓரம் கட்டியாச்சு
துரித உணவுகளை கொண்டு வந்தாச்சு
காவிரி பொய்த்துப் போயாச்சு
மரங்களை வெட்டியாச்சு
மணலை அள்ளியாச்சு
மரபணு காய்கறிகள் வந்தாச்சு
குழந்தையை தாய் பெத்து செவிலியர் வளர்க்கும்
கலாச்சாரமும் கணிசமா வந்தாச்சு
மருத்துவமும் பொறியலும் காசுக்கு வித்தாச்சு
மனிதாபி மானமும் மரித்துப் போயாச்சு
வல்லரசு ஆகுதோ இல்லையோ நாடு
வலிமையான ஊழல் மயமாச்சு எல்லாமே
உச்சத்துக்குப் போனபின்பு இங்கே
மிச்சமென்ன இருக்குது எச்சத்தைத்தவிர
மச்சமுள்ளவனே மலிந்து (அரசியல் வாதிகள்)
நிற்கையில்
சொச்சம் மிச்சமுள்ள
மானத்தையாவது மீட்போம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக