சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை---7-9-18

கம்மாக் கரைமேல
கவிதையா போறவளே
கம்மாக். கரைமேல
கவிதையாகப். போறவளே
சும்மா இருந்தவனை
சுழலவுட்டுப் போறியே
நித்தம் உன்னை நினைச்சு
பித்தம் ரொம்ப ஏறிப்போச்சு
சுத்தமா மாறிப் போனேன்
மொத்த உசிரும் உன் பின்னாலே
கண்டாங்கி சீலை கட்டி
கருகமணி. கழுத்திலிட்டு
இடை அசைச்சு நடக்கையிலே
இதயம் கொள்ளைப் போகுதே
அத்தை பெத்த ரத்தினமே
அதிகாலை நேரத்திலே
கிள்ளி வச்ச முல்லையை அள்ளிமுடிஞ்சிப். போறியே
உன்னைச் சுத்தி நான் அலைய
என்னைப் பார்த்து. ஊர் சிரிக்க
கண்டும் காணம போறியே மாமன்மேல
கரிசனம் கிடையாதா சொல்லடி
கம்மாக்கரை மேல கவிதையாகப் போறவளே
கட்டழகி உன் மேல கொண்ட காதலாளே
காண்பவர் உன்னைத்தான் பழி சொல்லநேரும்
கருணையோடு வந்து. என் கையாலே கட்டிக்கோடித் தாலி
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக