சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை ---19-7-18

நெஞ்சு பொறுக்குதில்லையே
பட்டம் பதவி பணம் புகழ் பறிக்கும்
துட்ட மனத்தினர் இட்டதே சட்டம்
மேடைப்பேச்செல்லாம் வேடப்பேச்சு
ஆடைக் குறைப்பே நாகரீகம் ஆச்சு
கல்விக் கூடங்களிலும் காசுக்காக
கற்பை விலைக்குபேசும் கயவர்கள்
கூறத்தகா தெல்லாம் கூறும் திரையொலி
எதையெதையோ செய்துஉயிர் வாழும் தத்துவமாச்சு
இளகிய உள்ளம் இல்லாமல் போய் சமூகம்
இரக்கம் இல்லா அரக்கனா மாறிப்போச்சு
நெறியற்ற வாழ்க்கையே நெடுந்துயாராகி
தறிகெட்டு அலைகிறார்கள் மக்களெல்லாம்
வேதாளம் போலே வெறிச்செயல் புரிகிறார்
சேதாரம் ஆகின்றார் சின்னஞ்சிறுசுகளும்
ஆதாரம் கண்டும் அதிகாரம் இல்லை என்கிறார்
பாதாளச்சாக்கடையில் போடுங்கள் உங்கள் சட்டத்தை
ஊழலைச் செய்தே உழல்கிறார் அரசியல்வாதி
பாழாக்கி மக்களைப் பாடாய்ப் படுத்துகிறார்
வாழ்ந்த தமிழின பண்பாடு வரலாற்றுண்மை
தாழ்ந்து தலைகுனிவதற்குள்தலை நிமிரவேண்டும்
மென் மேலும் நடக்கும்அக்கிரமங்கள் கண்டு
மேனியெல்லாம் துடிக்குது மென் மனமும் பதறுது
நெஞ்சு பொறுக்குதில்லையே நடப்பு நிகழ்வினாலே
வஞ்சகர் நெஞ்சம் உணரும் நாளே விடியல் நமக்கு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக