சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை--22-6-18

கட்டைவண்டி தெம்மாங்கு
கட்டை வண்டி பூட்டிகிட்டு
காட்டு வழி போவோம்புள்ளே
நாட்டுக்கோழி குழம்பு வச்சு
நயமா நீ எடுத்து வாடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சை வச்சு
கொஞ்சிபேசிப்போவோம் புள்ளே
நானும் நீயும் ஒன்று சேர்ந்தா
நாளும் நாளும் சந்தோசம்தான்
மாட்டோட சலங்கை சத்தம்
மனசுக்குள்ளே பிறாண்டுதடி
செவத்தை காளை வேகம்போல
செவத்த மச்சான் மோகம்தான்
சந்தையிலே நான் உனக்கு
சரிகை சேலை வாங்கித்தாரேன்
கருக மணி உன் கழுத்தில் கட்டி
உருகிப் போவேன்அழகைப்பார்த்து
கட்டை வண்டி பயணம்தான்
காலமெல்லாம் சுகம்தான்
வண்டி மாடு இரண்டும் ரெடி
சண்டி பண்ணாம வாடி புள்ளே
சோலைக் குயில் போலே
சோடிபோட்டுப்போவோம்
காடு வயலு சுத்தி கிட்டு
வீடு வாசல் போவோம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக