சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை--7-9-18

நினைவெல்லாம். நீயே
நின்ற இடமெல்லாம்
நிழலாகி தோணுதே
அன்று கண்டமுகமே
அலையாக ஆடுதே
உண்ணும்போதும்
உறங்கும் போதும்
உன் நினைவுதான்
பண்ணும் இசை பாடலிலும்
பொருளும் நீதான்
நினைவெல்லாம் நீயாக
எனை எரிக்கும் தீயாக
மனமெல்லாம் நிறைந்து
மறையாமல் நிற்கின்றாய்
நிற்பதும் நடப்பதும்
நின் செயலாள்தான்
நான் உயிரோடு இருப்பதே
உன் நினைவால்தான்
கணைவிழி தாக்கி
துணைவழி நின்று
இணையாகவருகிறாய்
நினைவெல்லாம் நீயாக
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக