சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை--20--6--18

வீரத்தின் விளைநிலம் விசயாலய சோழன்
வீரத்தின் விளை நிலமாம்
சுராதி ராசனின் சுந்தர புதல்வன்
தோள் வலிமை கொண்டவன் பகைவரை
தூளாக்கி வெற்றி காண்பவன்
பலம் பொருந்தியவன்
பல்லவரின் பிடியிலிருந்த
பல நாடுகளை தம்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தவன்
முத்திரையரை வெற்றியால்
முடங்கச் செய்தவன்
தஞ்சைக்கு தலை நகர்
அந்தஸ்து கிடைக்கச்செய்தவன்
திருப்பு முனையாக ஆனது
திருப்புறம்பியம் போர் சோழருக்கு
சோழரின் பெருமையை
தமிழகத்தில் நிலை நிறுத்தியவன்
இரு கால்களும் செயலிழந்தாலும்
இரு வீரர்களின் தோளேறி
போருடை அணிந்து வாளைசுழற்றி
வெற்றி வாகை சூடியவன்
சிற்றரசனாக உறையூரில்
சிறப்பாக ஆட்சிசெய்தவன்
விசயாலய சோழீஸ்வர
கோவிலைபுதுப்பித்தவன்
வீரத்தின் விளை நிலமாம்
விசயாலய சோழனின்
புகழ்பாடி பணிவோம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக