சனி, 29 செப்டம்பர், 2018

நதியோர நாணல்

காதலப் போற்றுவதில் சிறந்தவர்கள் பெண்களே
பற்று வைப்பார் பாசம் வைப்பார்
பார்க்கும் பாவையர் அழகென்றால்
கண்கள் மேயும் அவர் அழகை
கள்ளத்தனமாய் உள்ளம் ரசிக்கும்
காதலியானாலும்ஆரம்பத்தில் அமுதாய் இனிக்கும்
கலந்து முடிந்தால் கசப்பாய் இருக்கும்
நன்மையாய் தோன்றியது தீயதாய் தோன்றும் அடுத்தப்
பெண்ணின் மேலும் நாட்டம் வரும்
காதலென்று சொல்லி சொல்லி வாழ்வார்
காதலி இறந்துவிட்டால் அடுத்த நாளே
வேறொரு பெண்ணை இணைத்துக்கொள்வார்
வேறெந்த நினைவும் இல்லாமல் இன்பம் துய்ப்பார்
மலர் விட்டு மலர் தாவும் வண்டு அந்த
கோவலனே அதற்கு சாட்சியாய் நின்று
பணம் இழந்து பொருள் இழந்து பின்
மானமும் இழந்து மாண்டும் போனான்
மாற்றான் தோட்டத்து மலரென்றும் அறிந்து
மலரை கவர்ந்து சென்றான் ராவணனும்
சொன்னவை அனைத்தும் உண்மைஆண்கள்பற்றி
சொன்ன உரைகளும் நித்தியமே
பெண்ணின் காதல் ஒருமுறைதாம் பூக்கும்
பூத்த கணமே உள்ளே வெளியெலாம் ஒளிர்விடும்
உலவிடும் காற்றிலெல்லாம் காதலன் முகமே
உள்ளம் முழுதும் அவனே நிறைந்திருப்பான்
இதயம் முழுதும் காதலனே குடியிருப்பான்மனம்
எப்பொழுதும் அவன் எண்ணங்களிலேயே மிதப்பாள்
அக்கறை கொண்டு தானேஅடிமையாய் கிடந்து
எக்கணமும் அவன் நிழலையே நாடி நிற்பாள்
குடிப்பவனேயானாலும் குலையாது அவள் காதல்
அடிப்பவனேயானாலும் ஆதரிப்பாள் அனுசரிப்பாள்
காதலித்தவனையே கடவுளாகக் கருதுவாள்
காதலனை இழந்தாலும் காதல் நினவுகளிலேயே வாழ்வாள்
, நானிலத்தில் நங்கையரே காதலை போற்றுவார்
நம்புங்கள் திடமான உள்ளமுடையோர் பெண்களே
தெளிவாய் சொன்ன அத்தனை சொற்களையும் ஆய்ந்து
தேர்ந்து சாதகமான தீர்ப்பை தாருங்கள் நடுவரவர்க
:ளே
சரஸ்வதிராசேந்திரன்
Raja BarathiRaja and 14 others manage the membership and posts for நதியோர நாணல்கள் (இலக்கிய மன்றம்). கவிதாயினி சரஸ்வதி ராசேந்திரன்- ஆடவர் பார்வை மேயும் அழகிய வதனம் கண்டால்!
காதல் கொண்டு கவர்ந்தீர்த்து கலவியில் கலந்து காணாமலாவார் சிலர்! காதலில் தோய்ந்து வாழ்வார்! காதலி தொய்ந்த பின்னே வேற்றிடம் செல்வார்! அன்புக்கிணையாள் மரணித்தவுடனே வேறொரு நங்கை புகுவாள் வாழ்வில்! ஆடவரனைவரும் அப்படியல்ல! சிலரா பலரா என்பதல்ல வாதம்! நடந்ததை நடப்பை உரைத்தார் சரஸ்வதிராசேந்திரன் கவிதையால் கவினுற! வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக