சனி, 29 செப்டம்பர், 2018

4-6-18

முதல் வரி - நிலவாக நானும் தேய்ந்து செல்ல…
இறுதி வரி-- என்னுள் தஞ்சம் கொள்ளடி
நிலவாக நானும் தேய்ந்து செல்ல /
நினைவாக நீயும் கூடவே வருகிறாய் /
காந்த விழி சாயலினால் களவறியாயென்னை /
களவு செய்து கள்வனாக்கிய தேனடி /
விழிகள் சந்தித்தன காதலை பரிமாறின /
விழியில் பிறந்த காதல் சந்திப்பு /
உள்ளத்தில் மலர்ந்து உறவாய் இணைந்து /
உறவில் கலந்து பந்தத்தில் முடியவேண்டாமா /
பாலைவனப் பாதையிலே பாலாய்ப் பொழிந்து /
தேன் இறைத்து என்னைக் கிள்ளிப்போனாயே /
அடியே சாமத்தில் பாடுகிறேன் தனியாக /
நீயும் ராகத்திலே சேரணுமே துணையாக /
சில்லறையா சிதறுது சிரிச்ச சிரிப்பு /
சிவந்த முகம் கண்டு எம்மனசு பதறுது /
உன்னை நம்பியே நான் இருக்கேன் /
உன்னை நினைத்தே உருகி நிற்கிறேன் /
மங்கையுந்தன் துணையுடன் மகுடம் சூடுவேன் /
மண்ணில் பிறந்ததின் பலனை அடைவேன் /
உன்னை என் நெஞ்சத்தில் தாங்குவேன் /
என்னுள் வந்து தஞ்சம் கொள்ளடி பெண்ணே /
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக