சனி, 29 செப்டம்பர், 2018

தமிழமுது கவிச்சாரல்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
(சமூகம் சார்ந்தது)
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
தேடிய செல்வம் துணைவராத துயரமடா
மாய உலகத்திலே மதி மயங்கி
மண்ணாய்ப் போகும் உடல் வளர்த்தே
மமதை கொண்டு வாழ்வதும் ஏனடா ?
பிறந்ததும் அழுதோம் நாமே
பிறப்பின் பயனை அறிந்ததினாலே
இறப்பைத் தழுவும் வேளையிலே
இதயங்கனிந்து சிரிப்பவர் யாரடா ?
இங்கே இருப்பது சிலகாலம்
இதற்குள் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்
வாழ்க்கையோ ஒரு முறை
வாழ்ந்திடு நெறிமுறையாய்
நயமுடன் வாழவே நன்மைகள் செய்தால்
துயரங்கள் எல்லாம் துவண்டிட வைக்கும்
அயலான் என நினையாத மனதின் ஊக்கம்
வியந்திடச் செய்யும் வினை செயல் ஆக்கம்
ஆடி அடங்காத அகந்தை மனதில்
ஓடி அடையாது வாழ்க்கைத் தேரும்
முடிவே மரணம் முடியும் வாழ்க்கை
இடைப்பட்ட காலமே வாழும் காலம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக