சனி, 29 செப்டம்பர், 2018

புதியதொரு வாழ்க்கை--22-6-18

வயலோரக் காற்றினிலே
வயலோர காற்றினிலே
வரப்போரம் நடப்பவளே
இடுப்பு மடிப்பிலென்னை
இழுத்து செருகியவளே
ஒத்தையிலே போறவளே
சொக்குப்பொடி போட்டவளே
நெத்தியிலே சுருண்டமுடி
சுத்தி வந்து வளைக்குதடி
அத்தைமவ ரத்தினமே
சுத்திவரேன் மாமனுமே
நெளிஞ்ச நடையழகில்
நெஞ்சில சுளுக்கு வந்தடி
பாதகத்தி பார்க்காட்டி
நாதியத்து போயிடுவேன்
உன்னைத்தான் நெஞ்சிலே
உசிரா நினைச்சிருக்கேன்
அஞ்சாமல்பக்கம் வந்து
கொஞ்சி பேசி போடி
மஞ்சத்தாலிவாங்கித் தாரேன்
நெஞ்சிலே உன்னை சுமப்பேன்
சுத்தமான மாமன் மனசு
குத்தமொண்ணும் இல்லையடி
ஓரக்கண்ணால் பார்ப்பதென்ன
ஓரங்கட்டி வந்தாலென்ன
காலுக்கு கொலுசு தாரேன்
கழுத்துக்கு ஆரம் தாரேன்
சுயமாக சம்பாதிக்கும்
சுத்தமான மனசுக்காரன்
வக்கணையா பேசும் புள்ளே
வாயடைச்சு நிற்பதென்ன
வார்த்தை ஒண்ணு சொல்லிப்போடு
சேர்த்தணைச்சு சூட்டைத் தணி
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக