சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை--18-6-18

மனிதர்களை மாண்பாக்கு
வெந்தணல் வீசும் காற்றில்
வெம்பியே போகிறார் மக்கள்
வெற்றுடலுக்கு விவேகமில்லை
கற்றவனுக்கோ புத்தியுமில்லை
நஞ்சன்ன வஞ்சத்தால் நயந்துறவாடி
பிஞ்சுகளையும் சூறையாடும் கொடுமை
அஞ்சாமல் அநியாயம் செய்கிறார்
ஆள்பவரது அதிகார பாதுகாப்பால்
அல்லல்செய் பாவங்கள் அதிகமாயின
எல்லையில்லாத துணிச்சல் ஏகமாயின
நல்லுள்ளம் கொண்டவர்கள் நலமிழக்கிறார்
கல்லார்க்கும் கசடருக்கும்தான் வாழ்வின்று
கற்பில்லா வாழ்வை போதிக்கிறது பாடசாலை
தற்கொலையை தூண்டுகிறதுபோதை மாத்திரை
நற்பண்பில்லா நடைமுறை வாழ்க்கை யால்
காற்றில் வெந்தணல் வீசாமல் தென்றலா வீசும் ?
சாதிமத சடங்குச் சழக்குகள் ஓயவில்லை
சத்தியத்தை போற்றி யாரும் நடப்பதில்லை
குற்றங்கள் குவலயத்தில் குறையும் நாளே
காற்றில்வெந்தணல் நீங்கி தென்றல் வீசும்
பீதியை அகற்றுவாய் பெருகிடும் அச்சத்தை
பிணியாகி நின்று சுடுகிற தீங்கறுப்பாய்
மண்ணிலே மனிதர்களை மாண்பாக்கி
கண்ணியம் குறையாமல் காத்திடுஇறைவா
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக