வியாழன், 9 மார்ச், 2017

அமுத சுரபி

அந்திசாயும் நேரங்களில் ஆற்றாங்கரை ஒரங்களில் நாணல் ஆடும் கரையினிலே
நாணத்தோடு நீ நின்றாய்
வானம் பார்த்த பூமியாக நான்
கானம் பாடும் குயிலாக நீ
சேற்றுக்குள்ளே செந்தாமரை நீ
ஆற்றில் ஆடும்தென்றல் நான்
தஞ்சமுன்னு வந்தவனை
நெஞ்சத்திலே வாங்கி விடு
தாரமுன்னு பட்டம் தந்து
தோளிரண்டில் தாங்கிக்கிறேன்
பாசவலை வீழும்போது
பறவை பறக்க முடியாது
நேசத்தோடு நான் நின்றேன்
மோசம் செய்யாம வா புள்ளே
மனசாலே நான் நினைத்தேன்
மகராணி நீ வேண்டும்
ஆளைக்கொல்லும் ஆபத்து காதல்
உன் அன்பாலே விலகாதா ?
கோவை போல இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
மஞ்சத்தாலி செஞ்சு வாரேன்
கொஞ்சும் கிளியே நெஞ்சில் அணை
சரஸ்வதிராசேந்திரன்

4 கருத்துகள்: