புதன், 8 மார்ச், 2017

கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ் ---தமிழமுது கவிச்சாரல்


வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்...

தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 18--1--117 நாளாம் போட்டி கவிதையின்  தலைப்பு #ஒரு_முறை_புன்னகைக்_கொடு
வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்


#கவிதாயினி __கவிச்சிற்பி_மதுரா நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்

ஒரு முறை புன்னகைக் கொடு
ஒரு முறை புன்னகைக்கொடு இல்லையெனில்
துரு பிடித்துப்போகும் என் வாழ்க்கை உன்னைச்
சிறை பிடிக்கும் எண்ணம் எனக்கில்லை
வரை முறை வாழ்வு எனக்கும் புரியும்
புன்னகையில் நீ பூக்களை கொண்டு வந்தால்
நான் பூவெடுத்து மாலை தொடுத்து வருவேன்
உன் புன்னகை தேசத்தில் குடியிருக்க
எனக்கொரு இடம் நீ தர வேண்டும்
கொஞ்சு தமிழ் பாமழையே
என்
நெஞ்சமெனும் பூமழையே
கோடியில் ஒருத்தியம்மா
கோலமயில் ராணியடி நீ
பளிங்கான உன் சிரிப்பு
என்
மனசை பறிக்கும்
பவள விரிப்பு
உன் சிரிப்புக் காணாமல்
என் உயிர் உருகுது
கன்னத்தில் சிந்தாமல்
கண்ணீரும் உறைந்தது
நதி நீ வந்து விடு
கடல் எனைக் கொண்டுவிடு
சரஸ்வதிராசேந்திரன்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக