வாழ்த்துக்கள்
நடுவர் பணியாற்றி சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த கவிச்சிற்பி
சரோஜினி பாண்டியராஜன்
அவர்களுக்கும் தலைமை நிர் வாகி
ந. பாண்டியராஜன் அவர்கள் சார் பாக
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
*********************************
பாரதிதாசன் சிறப்புச் சான்றிதழ்
தலைப்பு: எந்தையும் தாயும் மகிழ்ந்து.....
என்று ஆரம்பித்து
நன் நாடு நம் நாடு --முடிவு
எந்தையும் தாயும் மகிழ்ந்து
என்னைப் பெற்றெடுத்து
அகவை ஐந்து அடைவதன் முன்னே
பள்ளியில் தள்ளி படித்திட வைத்தனர்
கல்வி கேள்விகளில் சிறந்தவனாக்க 16
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
போற்றிப் பெருக்கி அறிவுரை கூறி உருவாக்கினார்
அறிவின் தடையை அடித்து நொறுக்கு
குறுகிய நோக்கைக் குப்புற வீழ்த்து
மூளைத் திறனை முழுமை ஆக்கு 21
உண்மையும் உழைப்பும் உயிரெனக் கொள்
நன்மை செய்தே நல்லவனாகு
மனமறிந்து பொய்மை மறந்தும் உரையா
இன்பமும் துன்பமும் இரட்டை குழந்தைகள்
இன்பத் துன்பத்தை எளிதாக எடுத்துக்கொள் 19
தந்தை தன் நல் அறிவுரைகளை கேட்டு
மைந்தன் உன் வாழ்க்கைத் தடயங்களாய் கொள்
சான்றோர்கள் நிறைந்த
நன் நாடு நம் நாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக