புதன், 8 மார்ச், 2017

அமிர்தம்---15-2-2017---காதல் கவிதை-மோகனப்புன்னகை வீசிடும் நிலவே

14 hrs
நமது அமிர்தம் குழுவில் (14-02-2017 –15-02-2017) தேதிகளில் நடந்து முடிந்த காதல் கவிதைப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே சிறப்பாக கவிதை எழுதி இருந்தனர் அவர்களுள்
நடுவர் அனுராஜ் அவர்கள் தேர்வுசெய்து
சிறந்த கவிதைக்கான
சான்றிதழ் பெறுகிறார்
கவிஞர் சரஸ்வதி ராஜேந்திரன்
அவருக்கு கவிஞர் ஜெயசுதா,. நடுவர் அனுராஜ் ஆகியோருடன்
அமிர்தம் குழுமமும் வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறது
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மோனத்தில் என்னை நீ ஆழ்த்திவிட்டாய்
மேகம் கொட்டும் நீர் போலராகம் இசைக்கின்றாய்
மேனி சிலிர்க்குதடி உன் விரல் வாசிப்பில்
பூத்துச் சிரிக்கின்ற என் ரோஜாவே
பூரிக்க வைக்குதடி உன் இளமை
புன்னகையால் சம்மதம் சொல்லி விடு
புதையலாய் உன்னை நான் பாதுகாப்பேன்
நெஞ்சினில் நீ என்றும் தவழ வேண்டும்
நேசத்தை என்னுடன் பகிர வேண்டும்
கெஞ்சித் தவிக்கிறேன் உன் பதிலுக்காய்
கேட்ட வரம் தந்து எனை ஆதரிப்பாய்
என்னிடம் இனி இல்லை தெம்புமே
எதிர் நின்று வாதிட வார்த்தையில்லை
வந்து நீ தந்துவிடு உன். பதிலை
சிந்தை மகிழ்ந்திடும் தீரும் என் கவலை
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக