வியாழன், 16 மார்ச், 2017

சங்கத்தழிம் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 10/03/2017 தின பாரதிதாசன் போட்டியில், ஒற்றைக்கால் வாசலில் என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
வணக்கம் கவி உறவுகளே..
சங்கத்தழிம் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 10/03/2017 தின பாரதிதாசன் போட்டியில், ஒற்றைக்கால் வாசலில் என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர் Saraswathi Rajendran அவர்களை குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்: அர்ச்சனா குருநாதன்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்

ஒற்றைக் கால் ஊஞ்சலிலே
ஒற்றைக்கால் ஊஞ்சலிலே
உற்றுக் கண்ணி மையாமல்
சற்றும் உடலசைக்காமல்
வெற்றி ஒன்றே குறியாக
நிற்கும் நாரையார்
கோழியோ இட்ட முட்டைமேல் அமர்ந்து
அடைகாத்து குஞ்சு பொரிக்கும் மீனோ
தன்னுடைய பார்வையாலேயே
முட்டைகளை குஞ்சுகளாக்கும்
வித்தை கற்றது
ஓடு மீனோடக் கண்டு
உவகையால் வேட்கை கொண்ட
பீடுறு நாரையொன்று
பிரியமாய் வாய் திறந்து
வீழுறு சிறு மீன் தன்னை
விழுங்குதலுக்கு காத்து நின்றது
காலோடு சலங்கை கட்டி
கரையெல்லாம் வீணை மீட்டி
நதி பாடும் பாடல் கேட்டு
விதி முடிய மீனும் விரைந்து வந்தது
தொட்டுத்தழுவும் துள்ளித் திரிந்த மீனை
கட்டியணைத்து வாயில் நுழைக்கும் நாரை
கொக்கின் குறிக் கோள் போல
மக்களும் இலக்கை நிர்ணயம் செய்தால்
இலக்கை எளிதில் அடையலாம்
ஏற்றமாய் சாதனை புரியலாம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக