புதன், 8 மார்ச், 2017

செய்யுட்கலை சூடிகை-------குறுங்கவிதைப் போட்டி


02.02.2017 அன்று நடைபெற்ற செய்யுட்கலை சூடிகையின்" குறுங்கவிதைப் போட்டியில் "கிணற்றுத் தவளைகள் " என்ற தலைப்பிற்கு குறுங் கவிதை எழுதி கவிதாயினி சரஸ்வதி ராஜேந்திரன் 
அவர்கள் சூடிகை சான்றிதழ் பெறுகிறார்....
அவருக்கு குழுமம் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செய்யுட்கலை சூடிகை குழுமம் சார்பில் அகம் மகிழ்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்....
சிறந்த கவிதைகளைத் தேர்வு செய்த நடுவர் கவிஞர் திருமதி சுமதி சங்கர் அவர்களுக்கும் குழுமம் சார்பில் வாழ்த்துகளும் நன்றிகளும்!
கிணற்றுத் தவளைகள்
வலை விரித்தாடும்
வஞ்சம் தெரியாமல்
குறைகள் நிறைந்த
குடும்ப வாழ்க்கை
கொலைவெறி பேச்சு
கொள்கையற்ற செயல்கள்
என்ன இருந்தாலும்
ஏற்றுக் கொண்டு
உண்மைத்தெரியாமல்
நன்மைகள் செய்து
கிணற்றுத்தவளையாய் நான்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக