நாற்காலி
நாட்டை சூறையாடி நலமிழக் கச்செய்ய
நாற்காலிக்கு போட்டி போடுவார் நல்லான் போல
வெல்ல வழி போடுவார் யாருடனும் கூட்டு
வெளியில் தெரியாமல்
ஆள் சேர்ப்பார் கள்ள வாக்கிற்கு
கோடிகளை சேர்க்க
கேடியாயும் மாறுவார்
கூனி வேலை செய்வார்
கூனிக்குறுகியும் கும்பிடு போடுவார்
நாற்காலி ஆசையில் நாறினாலும் கவலப்பட மாட்டார்
வாக்கிற்கு நோட்டை நீட்டி
வாக்குகள் வாங்கி தேட்டை போடுவார்
ஆளுமையின் அடையா:ளம்
அதிகாரத்தின் குறியீடு
ஆண் பெண் அமரும் ஆசனம்
மணம் புரிய நாற்காலி
பிணத்திற்கும் கூட
சரியாசனம் நாற்காலி
பிள்ளகளுக்குள்ளும் வீட்டில்
பிரிவினையைத் தரும் நாற்காலி
விளையாட்டிலும் போட்டாபோட்டி
பாட்டுப் பாடி அமரும் நாற்காலி
நாற்காலி சண்டையில்
நாடிழந்த மன்னர்களும் அடக்கம்
நாற்காலியை கண்டு பிடித்தவனை
நாடு கடத்த வேண்டும்
சரஸ்வதிராசேந்திரன்
நாற்காலிக்கு போட்டி போடுவார் நல்லான் போல
வெல்ல வழி போடுவார் யாருடனும் கூட்டு
வெளியில் தெரியாமல்
ஆள் சேர்ப்பார் கள்ள வாக்கிற்கு
கோடிகளை சேர்க்க
கேடியாயும் மாறுவார்
கூனி வேலை செய்வார்
கூனிக்குறுகியும் கும்பிடு போடுவார்
நாற்காலி ஆசையில் நாறினாலும் கவலப்பட மாட்டார்
வாக்கிற்கு நோட்டை நீட்டி
வாக்குகள் வாங்கி தேட்டை போடுவார்
ஆளுமையின் அடையா:ளம்
அதிகாரத்தின் குறியீடு
ஆண் பெண் அமரும் ஆசனம்
மணம் புரிய நாற்காலி
பிணத்திற்கும் கூட
சரியாசனம் நாற்காலி
பிள்ளகளுக்குள்ளும் வீட்டில்
பிரிவினையைத் தரும் நாற்காலி
விளையாட்டிலும் போட்டாபோட்டி
பாட்டுப் பாடி அமரும் நாற்காலி
நாற்காலி சண்டையில்
நாடிழந்த மன்னர்களும் அடக்கம்
நாற்காலியை கண்டு பிடித்தவனை
நாடு கடத்த வேண்டும்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக