வியாழன், 9 மார்ச், 2017

கனவுகளில் கசியும் குருதிகள்

கனவுகளில் கசியும் குருதிகள்
உன் விழிவாசல் திறந்துதானே
என்னை உள்ளே அனுமதித்தாய்
உன் சம்மதத்திற்கு பின்புதான்
நான் சொர்க்கத்தை வாங்கினேன்
எனக்கொரு துணையாக என்றும்
உனைத்தானே நான் நினைத்தேன்
கனவுகளை எழுதி மனசுக்குள் படைத்தேன்
தினம் தினம் உனைத்தான் யோசித்தேன்
அன்பாலே எனை ஈர்த்துத்தானே
தன்பாலே கோர்த்துக்கொண்டாய்
எனை அணைக்கும்போதெல்லாம்
இணைங்கி வளைந்து கொடுத்தேன்
உன் கரங்களில் ஒளித்துவைத்திருந்தகத்தி
என்னை காயப்படுத்தினாலும் கூட
உன் மீது கொண்ட காதலால்
உன்னையும் பொறுத்துக்கொண்டேன்
உன் அன்பால் எப்படி முடி சூட்டினாயோ
உன் கரங்களில் எனக்கான முள் முடியும்
அன்றே தயார் பண்ணி வைத்திருந்தாயோ
நானறியேன் நங்கையே நன்றாக இரு
காவிரியாய் மனம் இறங்கி நீயும் வரவில்லை
காற்றாடி போலறுந்து வீழ்ந்து விட்டேன்
கனவில் கசியும் குருதியாய் கண்ணீர்
என் கன்னத்தில் வடிகிறது நசிந்த காதலால்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக