புதன், 8 மார்ச், 2017

தமிழமுதுகவிச்சாரல்---2=12=2016--தொடுவானம் தொடும் நேரம்

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
- பாவேந்தர்
வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்...
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 2-12--16 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_தொடுவானம்_தொடும்_நேரம்
.
வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
#கவிஞர் ___கவிச்சிற்பி_மு_சாத்தப்பன்_நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவருர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தொடுவானம் தொடும் நேரம்
தூர தூர விலகி ஓடும்
தொட்டுவிடத் துடிக்கும் நேரம் அது
விட்டு நம்மை தொலைந்தே போகும்
சிரத்தையுடன் குழந்தைகள் கடலருகே
சலிக்காமல் கட்டும் வீட்டை
கடல் நீர் விரைந்து வந்து
கலைத்து விட்டு செல்வது போல
தொடுவானம் தொலைந்து போகும்
உதயமாகும் போதே வாழ்க்கையில்
உச்சிக்குப் போக தடுக்கும் தன் இயலாமை விலங்கை
தகர்த் தெறிந்தால் தானே
உயரக் கிளம்ப முடியும் நம்மால்
முடியாதென்பது இயலாமையின் அலட்டல்
முடியுமென்பது முயற்சியின் வலிமை
முயற்சியும் பயிற்சியும் வெற்றிக்கு வழி
முட்டி முட்டி மோதித்தான் பட்டுப்புழு வெளிவரும்
தோல்வி கண்டு சோர்ந்திடாமல் நாமும்
தொய்வில்லாமல் தொடரும் முயற்சியால்
தொடுவானம் தொடுகின்ற நேரம்
தொட்டு விட்டால் கூடும் பேரானந்தம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக