புதன், 8 மார்ச், 2017

கம்பன் கவிக்கூடம் ----குறுங்கவிதை போட்டி

 கம்பன் கவிக்கூடம்
நட்புறவுகளுக்கு வணக்கம்

எமது கவிக்கூடத்தில் 04 / 01 / 2017 முதல்
09 / 01 / 2017 வரை நடைபெற்று
முடிந்த குறுங்கவிதை போட்டி முடிவுகள்

 அன்பின் உருவம் அன்னை 
எனும் தலைப்பில் கவியெழுதி வெற்றி
வாகை சூடிக்கொள்கிறார்.
<<<>>><<<>>><<<>>><<<>>><<<>>><<>>>

கவிதாயினி . சரஸ்வதி ராசேந்திரன்
<<<>>><<<>>><<<>>><<<>>><<<>>><<>>>

அவர்களுக்கு
கம்பன் கவிக்கூடம் குழுவினர்களின்
பாராட்டுக்கள்.
இவர்களுடன்
உங்கள் கவிப் பிரியன்
தலைப்பு---அன்பின் உருவம் அன்னை
அன்பின் உருவம் அன்னை
ஆதுரத்தோடு தழுவுவாள் என்னை
இனிமையாய் பேசி இதயசுகம் தருவாள்
ஈகைத் திறனை ஊக்குவிப்பாள்
உண்மை பேச வலியுறுத்துவாள்
ஊர் நலம் பேண அறிவுறுத்துவாள்
எதையும் இகழாதிருக்க சொல்வாள்
ஏற்றம் வேண்டுமாயின் உழை என்பாள்
ஐயம் தெளிவுற கற்கச் சொல்வாள்
ஒற்றுமையாய் இருக்க பழக்குவாள்
ஓங்கி உயர்ந்து வாழ வழி சொல்வாள்
ஒளடதமாய் இருந்து நலம் பேணுவாள்
அஃதே அன்னையின் அன்பு உருவம் நல் மனம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக