02.01.2017 அன்று நடைபெற்ற செய்யுட்கலை சூடிகையின்"தவமின்றிக் கிடைத்த வரம்" எனும் தலைப்பில் சிறப்பாக கவியெழுதி கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன் அவர்கள் சூடிகை சான்றிதழ் பெறுகிறார்....
அவருக்கு குழுமம் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செய்யுட்கலை சூடிகை குழுமம் சார்பில் அகம் மகிழ்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்....
சிறந்த கவிதைகளை தேர்வு செய்த நடுவர் கவிதாயினி வபீரா வபீ ( Wafeera Wafee) அவர்களுக்கு மனம் மலர்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...
************************************************
தவமின்றி கிடைத்த வரம்
தாயாக எனை அணைத்தது
அவள் கரம்
திருத்தமாக எனை வளர்த்தாள்
தீயவை எனை அண்டாமல்
பாதுகாத்தாள்
துயரம் வருங்கால் துயர்
துடைத்தாள்
தூய்மை வாய்மை நாணயம்
ஊட்டினாள்
தெளிந்த நல் பாடம் புகட்டினாள்
தேவாரம் ஓத தினம் சொல்லித்
தந்தாள்
தொண்டுகள் செய்திட பழக்கினாள்
தோன்றியது புகழோடு
வாழ்வதற்கென்றாள ்
தைரியம் சொல்லி எனை
வளர்த்தாள்
குழந்தை மனதில் அவள்
தாயாகிறாள்
குலமகள் முதிர்ச்சியில்
இறைமை ஆகிறாள்
கணவனின் அன்பிலே அவள்
தாரமாகிறாள்
கற்புக்கரசி குடும்ப விளக்காய்
ஒளிர்கிறாள்
தன் சுகம் மறந்து குடும்ப
சுகமே பெரிதென வாழ்ந்த
தாயே எனக்கு தவமின்றி
கிடைத்த வரம்
சரஸ்வதிராசேந்திரன்
தவமின்றி கிடைத்த வரம்
தாயாக எனை அணைத்தது
அவள் கரம்
திருத்தமாக எனை வளர்த்தாள்
தீயவை எனை அண்டாமல்
பாதுகாத்தாள்
துயரம் வருங்கால் துயர்
துடைத்தாள்
தூய்மை வாய்மை நாணயம்
ஊட்டினாள்
தெளிந்த நல் பாடம் புகட்டினாள்
தேவாரம் ஓத தினம் சொல்லித்
தந்தாள்
தொண்டுகள் செய்திட பழக்கினாள்
தோன்றியது புகழோடு
வாழ்வதற்கென்றாள ்
தைரியம் சொல்லி எனை
வளர்த்தாள்
குழந்தை மனதில் அவள்
தாயாகிறாள்
குலமகள் முதிர்ச்சியில்
இறைமை ஆகிறாள்
கணவனின் அன்பிலே அவள்
தாரமாகிறாள்
கற்புக்கரசி குடும்ப விளக்காய்
ஒளிர்கிறாள்
தன் சுகம் மறந்து குடும்ப
சுகமே பெரிதென வாழ்ந்த
தாயே எனக்கு தவமின்றி
கிடைத்த வரம்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக