புதன், 8 மார்ச், 2017

முத்தமிழ்க்களம் ----புதுக்கவிதைப் போட்டி

முத்தமிழ்க்களம் 
உறவுகளுக்கு வணக்கம்
====×====×====×====×====×====
எமது குழுமத்தில் 26 / 01 / 2017 தொடக்கம்
31 / 01 / 2017 வரை நடைபெற்ற
தலைப்பு :- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
புதுக்கவிதைப் போட்டியின் 
வெற்றியாளராக 
தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
<>×<>×<>×<>×<>×<>×<>×<>×<>×<>×<>×<>×<>
கவிதாயினி . சரஸ்வதி ராசேந்திரன்
========×========×========×========
அவர்களுக்கு
முத்தமிழ்க்களம் குழுவினரின்
பாராட்டுக்கள்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை எண்ணங்களே
உயர்வுக்கு வழி வகுக்கும்
வேற்றுமை எண்ணங்களால்
விளையும் தீமைகள்
எத்துணை ஆயினும்
இயந்திணைந்து வாழ்ந்திடின்
அத்துணையும் ஆக்கம் பெறும்
ஒத்தக் கருத்தால்
உலகுயரக் காணலாம்
கூடி வாழ்ந்தால்
கோடி நன்மையே
சேர்ந்து வாழ்வதே
சிறந்த வலிமை
பிணக்கின்றி இருந்தால்
பிறக்கும் ஒற்றுமை
குறைகளைக் களைந்தால்
நிறையும் ஒற்றுமை
மதங்களின் ஒற்றுமை
மனிதத்தை வளர்க்கும்
குடும்பத்தின் ஒற்றுமை
குலத்தைக் காக்கும்
எல்லோரும் ஓர்குலம்
என்றும் மனதில் கொள்ளுவோம்
அன்று ஒன்றுபட்டு நின்றதால்தான்
இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்
ஒருகைதட்டினால் ஒலித்திடுமா ஓசை
இருகரம் சேர்ந்தால்தான் இரண்டுபடும் சத்தம்
உறவுக்கும் உலகுக்கும் ஒற்றுமையே பலம்
உறவுக்கு கை கொடுப்போம்
ஒற்றுமைக்கு குரல் கொடுப்போம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக