புதன், 8 மார்ச், 2017

ஒரு கவிஞனின் கனவு-----சிறந்த போட்டிக் கவிதை---01.02.2017

01.02.2017 ம் தேதி அன்று நமது # ஒரு கவிஞனின் கனவு சிறந்த போட்டிக் கவிதைத் தேர்வில் வெற்றியாளர்களுள் ஒருவர் கவிஞர் #சரஸ்வதிராசேந்திரன்# அவர்களுக்கும் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
இது ஒரு கவிஞனின் கனவு தேர்வுக்குழுவினர்
மயிலிறகு
துள்ளித்திரிந்த நாட்களில்
அள்ளிவந்தாய் மயிலிறகை
அன்பான என்னிடம் ஒன்று கொடுத்தாய்
நீகொடுத்த பரிசாய் அதை உணர்ந்து
நிறைவுடன் அதை வாங்கி முத்தமிட்டேன்
உன்னையே முத்தமிடுவதாக நினைத்து
குட்டி போட்டால் எனக்குத்தருவாயா என
குறும்புடன் கேட்டதும்குதூகலத்துடன்அதே
குறும்புடனோ உனக்கு இல்லாமலா என்று
சொன்னதுடன் அல்லாமல் உடனே
புத்தகத்தில் புதைத்து வைத்தேன் அரிசியுடன்
ஆனால் இன்றுவரை அதுவும் குட்டி போடவில்லை
என் நினைவுகளும் உன்னை விட்டுப்போகவில்லை
நீ பாட்டுக்கு வேறொருவனை மணந்து போனாய்
நான் மட்டும் நீ கொடுத்த மயிலிறகுடன் தனிமையில்
ஏன் இப்படி என்னை மறந்து போனாய்
அன்று அத்தனை மாணவன் இருக்கும் போது
என்னுடதானே சினேகம் கொண்டாய்
எனக்குத்தானே மயிலிறகுத் தந்தாய்
பின் எப்படி எனை மறந்து போனாய்
இன்றுவரை அதற்கு பதில் இல்லை
உன் நினைவை மறக்கமுடியாமல்
நீ கொடுத்த மயிலிறகுடன் வீதிதோறும்
பைத்தியமாய் அலைந்து கொண்டிருக்கிறேன்
ரோட்டிலேயே உறங்குகிறேன் நீகொடுத்த
மயிலிறகால் நீவியபடியே ,,,,,, ஆண் பாவம் பொல்லாதது
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக