புதன், 8 மார்ச், 2017

6-3-2017 சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா --களத்து மேட்டி ல்காத்திருக்கேன்


இனிய இரவு வணக்கம் கவி உறவுகளே..
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
06/03/2017 அன்று நடந்து முடிந்த களத்து மேட்டில் காத்திருக்கேன் எனும் தலைப்பில் கிராமியக் கவிதைப் போட்டியில் கவிதை எழுதிய கவிஞர் Saraswathi Rajendran அவர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார். கவிதை எழுதிய அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்.
சிறப்பான கவிதைகளை தேர்வு
செய்த நடுவர் கவிஞர் பிரிதிவிராஜ் லோஜி அவர்களுக்கும் வாழ்த்துகள் .
தலைமை நிர்வாகி ந. பாண்டியராஜன்
மற்றும் பொறுப்பாளர்களுடன்
சுமதி சங்கர்
கிராமிய சிறப்புசான்றிதழ்—6-3-2017
களத்து மேட்டில்காத்திருக்கேன்
களத்து மேட்டில் காத்திருக்கேன் கண்ணம்மா
உளம் திறந்து ஒடி வாடி என் செல்லம்மா
அஞ்சு வயசிலிருந்து உன்னை அறிவேன் செல்லம்மா
கஞ்சி கலையம் சுமந்து வாடி கண்ணம்மா
சின்ன வயசு முதல் உன்னை நினைச்சு வாழறேன்
என்னை நினைக்க உனக்கு நேரமில்லையா சொல்லடி
மணப்பாறை முறுக்கு உனக்கு பிடிக்குமுன்னு
மனதாரவாங்கி வந்திருக்கேன் வாடிப்புள்ளே சீக்கிரம்
ஆத்தூரு சந்தைக்கு உன்னை நானும்
அழகாக வண்டி பூட்டி அழைச்சுப்போறேன்
முட்டாயி தேன் குழலும் மட்டுமல்ல
முறுக்கு லட்டுப் பூவந்தியும் வாங்கித்தாரேன்
சட்டுன்னு சொல்லிப்போடு உன் சம்மதத்தை
கட்டுவேன் தங்கத்தாலே தாலி உன் கழுத்தில்
களத்து மேட்டில் காத்திருக்கேன் கண்ணம்மா
காத்திருக்க வைக்காம கட்டழகி விரைந்து வா
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக