புதன், 8 மார்ச், 2017

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில் 02/03/2017ம் நாள்===படக்கவிதை

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
02/03/2017ம் நாள்
நடந்து முடிந்த படம் பார்த்து
கவிதை எழுதும் போட்டியில்
கவிதை எழுதிய கவிஞர்
[ சரஸ்வதி ராசேந்திரன்]சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய
அனைத்து பாவலர்களுக்கும்
வாழ்த்துக்கள்
நடுவர் பணியாற்றி சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த
கவிதாயினி அக்கரைக் குயில்
ஹிம்ஸான
அவர்களுக்கும் வாழ்த்துக்களும்
நன்றிகளும்
தலைமை நிர் வாகி
ந. பாண்டியராஜன்
படக்கவிதை சான்றிதழ் போட்டியாளர்
உழைப்பு அதுவே அவர்தம்
நினைப்பு எப்பொழுதும்
பிறர் கை எதிர்பார்க்காமல்
தன் கையே தனக்குதவியாய் வாழ்ந்தவர்கள்
பிள்ளைகள் பத்து பெற்றாலும்
தொல்லைகள் அவர்களுக்கு கொடுக்காமல்
தன் உழைப்பில் உயர்வு காண்பவர்கள்
உழைப்பிற்கும் வயதிற்கும்
உச்ச வரம்பு இல்லை யென நிருபித்தவர்கள்
உழைத்து உழைத்து உரமேறிய கைகள்
உச்சி வெயிலையும் துச்சமாக நினைத்து
ஒருவருக்கொருவர் துணையாக இணையாக
பாடுபடும் பாட்டாளிகள் காணும் கனவெல்லாம்
நனவாய் மலர்ந்திடச் செய்யும் நற்றவரவர்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக