புதன், 8 மார்ச், 2017

கவியருவி ---- பொங்குமின்பத்தைத்திங்கள் போற்று' கவிதைப்போட்டி

தமிழர் திருநாளையொட்டி நமது கவியருவியில் நடத்தப்பட்ட ' பொங்குமின்பத்
போற்று' கவிதைப்போட்டியில் ஆறுதல் தரச்சான்றிதழ் வென்றுள்ள கவிஞர் சரஸ்வதி இராசேந்திரன் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறோம்.
பொங்குமின்பத் தைத்திங்கள் போற்று
புறக்குப்பைகளுடன் மனக்குப்பைகளை அகற்றி
வீட்டுச் சுவற்றிற்கெல்லாம் வெள்ளையடித்து
பழையன கழித்து புதிதாய் பிறந்த தாய் உணர
போகியை புகையின்றி கொண்டாடுவோம்
மாவிலைத் தோரணங்கள் குருத்தோலை கூந்தல்கட்டி
மஞ்சள் இஞ்சிக்கொத்துடன் கரும்பு வைத்து
வண்ணம் தீட்டிய புதுப்பானை எடுத்து
புத்தரிசி புது வெல்லம் இட்டு பொங்கலிட்டு
பொங்கி வரும் வேளையிலே பொங்கலோ
பொங்கல் என் குடும்பத்தார் அனைவரும்
குலவையிட்டு குதூகலமாக கூடியிருந்து
சூரியபகவானுக்கு புதுப்பொங்கல் படையலிட்டு
சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹ்ருதயம் படித்து
பொங்குமின்ப தைத்திங்கள் போற்றுவோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யகாலையில்
எழுந்துஅல்லிவட்டம் புள்ளிவட்டம் போட்டு
பசுக்கள் காளைகள் கன்றுகளை
குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் இட்டு
கழுத்தில் நெட்டி மாலையுடன் கரும்பு தேங்காய்
கட்டி தூப தீபம் காட்டி பொங்கல் வாழைப்பழம்
கொடுத்து கும்பிட்டு முப்பத்துமுக்கோடி
தேவர்களை பூஜித்த பலனை அடைய
பொங்குமின்ப தைத்திங்கள் போற்றுவோம்
சரஸ்வதிராசேந்திரன்
இவண்,
கவியருவி நிர்வாகக்குழு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக