புதன், 8 மார்ச், 2017

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா-----வெண்கல வரிகள்-----15/01/2017---25/01/2017

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே.

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்

15/01/2017 நாள் ஆரம்பித்து25/01/2017ம் நாள் நடந்து முடிந்த சங்கத்தில் சிந்தும் கவி பாடல் போட்டியில் பாடல் எழுதி திரை இசைப் பாடல் சான்றிதழ் வெண்கல வரிகள்
பெறுகின்றார்
கவிஞர் 
சரஸ்வதி ராசேந்திரன்   சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் இப்போட்டியி ல்பாடல்கள் எழுதிய அனைத்து பாவலர்களுக்கும் வாழ்த்துக்கள்

இதன் நடுவர்களாக தலைமை நடுவர் சரோஜினி பாண்டிய ராஜன்

துணை நடுவர்கள் திருமதி சி பிருந்தா திருமதி அபிராமி
மெட்டு பார்த்து தேர்வு செய்த நடடுவர் பாடகர் இசையமைப்பாளர் திரு செல்வ குமார் சிங்கர் அவர்கள்
நடுவர்களுக்கு வாழ்த்துக்கள்
தலைமை நிர் வாகி ந. பாண்டியராஜன் ********************************
பாடல்=-பல்லவி
உயிர் கொடுத்த அம்மாவே நீ
உயிர் நீக்கி போனதென்ன ? உன்னைப்போல யார் காப்பார்
என்னைப்போன்ற தாய் இழந்தவனை
சரணம்
ஊரார் பலரிருந்தும்
உற்றார் சிலரிருந்தும்
உத்த சனம் யாருமில்லே
உத்தமமான உன்னைப்போல
இருந்தவரை அருமை தெரியவில்லே
இல்லாதபோது எண்ணி அழுகின்றேன் ஊரில்
சிறுமையாகி நிற்கிறேன்
வறுமையாலே வாடுறேன் அருமை குலைஞ்சி போச்சு
கருமையாகிப் போச்சு வீடு
உதவாக்கரையாகி நான்
உன்னை வாட்டி வதைத்தேனே
என்னை நீ ஒரு வார்த்தை
சொன்னதில்லே வார்த்தையாலே
கொன்னதில்லை ஒருபோதும்
உள்ளுக்கு:ள்ளே இல்லே ஆனந்தம்
ஊருக்கும் புரியலே என் ஆதங்கம்
ஊற்றான உன் அன்பு எனை
வாட்டி வதைக்குதே
காற்றாக நான் மாறி
சுவாசத்திலே கலந்துடணும்
உந்தன் மடி வேண்டும் அம்மா
உறங்கி நானும் நாளாச்சு அம்மா
அம்மா அம்மா அம்மா
சரஸ்வதி ராசேந்திரன்
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக