புதன், 8 மார்ச், 2017

கம்பன் கவிக்கூடம்

எங்கள் வீட்டுப் பிள்ளை முரட்டுக்காளை
வீரம் செறிந்த பூமியிது
ஓரம் போகுமோ வீரம்
தடைகளை நீக்க
புடை சூழ கிளம்பி விட்டான்
தமிழன் தன்மானம் காக்க
சிந்திக்கும் எண்ணம்
சிறிதளவும் இல்லாமல்
வஞ்சிக்கும் நோக்கம் கொண்டால்
அஞ்சாமல் போராடுவோம்
நாடி நரம்புகள் எல்லாம் துடித்து
ஓடி வரும் வீரத்தால்
ஓடவிரட்டுவோம் பீட்டாவை
எங்கள் வீட்டுப் பிள்ளை முரட்டுக்காளை
தடை செய்வோரை விரட்டிடும் நாளை
அடக்கிடும் அடம் செய்யும் ஆளை
தார்மீகத்தை அழிக்க வந்தால்
தலை வணங்காது தமிழினம்
வீறு கொண்டுஎழுந்திடும்
வெற்றி வாகை சூடிடும்
ஜல்லிக்கட்டுத் தடையை அடித்த நொறுக்கு
குறுகிய நோக்கை குப்புற வீழ்த்து
நாளைய தலைமுறை
வாகை சூடிட வழி நடைப்படுத்து
பீட்டாவை விரட்டி ------------- சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக