வியாழன், 9 மார்ச், 2017

கனவிலும் உன் நினைவே

கனவிலும் உன் நினைவே
கண்ணுக்குள்ளே காந்தம் வச்சு
கவர்ந்திழுத்த கன்னிகையே என்
எண்ணத்திலே இடம் பிடித்து
கண்ணாமூச்சி ஆடுறியே
வண்ணப் புது மலரே உன்
கண்ணசைவில் நான் கவியானேன்
கண்ணோடு கண் பண்பாடினால் உன்
பொன்மேனி என் வசமாகும்
கண்ணம்மா நீ தென்றல் காற்று
என் இன்பக்கேணியின் ஊற்று
பொங்கும் என் மனதை ஆற்று
புன்னகையால் மனதை தேற்று
துடிப்பான என் உள்ளம்
துவளும் கொடியாக விடலாமா
உன் காலடியில் படியாய் கிடந்து
பணிசெய்வேன் பசுங்கிளியே
விழி வைத்து காத்திருக்கிறேன்
எழில் நிலா உன் வரவுக்காக
நித்திரையும் இல்லையடி
புத்தியும் வேலைசெய்யவில்லை
காசு பணம் பெரிதல்ல உன் அன்புக்காக
ஊசிமுனையில் தவம் இருக்கேன்
கனவிலும் உன் நினைவே
நினைவிலும் உனை சுமப்பேன்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக