புதன், 8 மார்ச், 2017

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா----- சிறப்பு கவிதைப்போட்டி

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே. 
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்

27/01/2017ம் நாள் இந்த உலகில் செழித்த இனமா இது
என்றதலைப்பில் நடந்து முடிந்த சிறப்பு கவிதைப்
போட்டியில்
கவிதை எழுதிய கவிஞர்
சரஸ்வதி ராஜேந்திரன் சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார்
 
கவிதை எழுதிய
அனைத்து பாவலர்களுக்கும்
வாழ்த்துக்கள் 
நடுவர் பணியாற்றி சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த
கவிஞர் கவிச்சிற்பி. மருதூர்
நப்றிஸ்
அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தலைமை நிர் வாகி
ந. பாண்டியராஜன்
*********************************
பாரதிதாசன்போட்டியாளர்
தலைப்பு
உலகில் செழித்த இனமா இது
இந்த பிறப்பு வேண்டாம் இனி
=============================
உலகில் செழித்த இனமா இது
உள்ள உறவாலே ஓங்கி நின்றதது
வாய்மையும் தூய்மையும் இருக்கிறதா
தாய்மை மதிக்கப்படுகிறதா இன்று
நாசம் விளைவிக்கும் நம்பிக்கைத் துரோகங்கள்
பூசலால் மக்கள் புதையுண்டு போகிறார்கள்
நினைத்திடலாகா நிலைகளில் வஞ்சம்
அனைத்து வேலைக்கும் கேட்கிறார் லஞ்சம்
போற்ற வேண்டிய ஆசிரியர் இனத்தை
தூற்றி இழிவு படுத்துகின்றார் மாணவர்கள்
பெண்ணாகப் பிறந்தவர்களை இன்று
கண்ணாக யார் நினைக்கிறார்கள் ?
கூறத் தகாததை யெல்லாம் கூறுகிறது
காணத்தகாததை யெல்லாம் காட்டுகிறது திரையொளி
எதையெதையோ செய்து உயிர்வாழும் தத்துவம்
இன்றுலக மனிதர்களின் இயல்பாய் ஆகிவிட்டது
என்னால் முடியவில்லை இந்தப் பிறவி
வேண்டாம்இனி வெளியேறுகிறேன்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக