புதன், 8 மார்ச், 2017

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்26/02/2017ம் நாள்-உன்றன் பெயரே உள்ளம் எழுதுமே

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்26/02/2017ம் நாள்
"உன்றனின் பெயரே உள்ளமும் எழுதுமே...."
எனும் நடந்து முடிந்த காதல்
கவிதை எழுதும் போட்டியில்
கவிதை எழுதிய கவிஞர்
[ சரஸ்வாதி ராசேந்திரன்]சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய
அனைத்து பாவலர்களுக்கும்
வாழ்த்துக்கள்
நடுவர் பணியாற்றி சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த
கவிதாயினி சரஸ்வதி பாஸ்க்கரன்
அவர்களுக்கும் வாழ்த்துக்களும்
நன்றிகளும்
தலைமை நிர் வாகி
ந. பாண்டியராஜன்
உன்றனின் பெயரே உள்ளமும் எழுதுமே
உன்றனின் பெயரே உள்ளமும் எழுதுமே
ஒன்றாகக் கூடியே ஒவ்வொரு நாளும்
கொண்டாடி நிற்போம் மகிழ்ந்து
விரிந்த மலராய் ப்ரந்த மணமாய்
விரைந்து வருவாய் காதல் வெற்றிபெற
வரம் தருவாயென் வடிவழகி
உனைஆளும் ஆசை கனவாகிப்போகாமல்
நிலையாக வாழ நிமிர்ந்து பதிலைச்சொல்லு
குலைக்காதே நெஞ்சை அஞ்சுகமே
கல்லாதி ருந்தவனை கற்றவன் ஆக்கினாய்
கருவறுக்கும் நாத்திகனை கனிவாக மாற்றி
ஆத்திகனாய் மாற்றிவிட்டது உன் அன்பு
தென்னை மரத் தோப்புக்குள்ளே
தென்றலாய் வந்து சேதி சொல்லு
தேவனவன் காதுக்குள்ளே
கண்ணு ரெண்டும் மூடாம
உன்னை எண்ணி நூலானேன்
எண்ணி எண்ணி நான் கூட
ஏக்கத்திற்கு ஆளானேன்
அன்புடன் நாடி அரவணைத்து விடு
அனுதினமும் உன்றன் பெயரேஉள்ளமும் எழுதுகிறது
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக