வியாழன், 16 மார்ச், 2017

நூல் ஆய்வரங்கம் தமிழ் பட்டறை

தோழமைகளுக்கு வணக்கம்!
தமிழ்பட்டறையில் ஆண்டுவிழா போட்டிக்காக நடைபெற்ற வண்ணக் கனவுகள் கவிதைப்போட்டிக்காக கவிஞர் சரஸ்வதி ராஜேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட கவிதையை "நூல் ஆய்வரங்கத்திற்காக " எடுத்துக்கொண்டுள்ளேன்.
*******************************************
திண்ணைப்பள்ளி : நூல் ஆய்வரங்கம்
********************************************
பதிப்பகம் : தமிழ்ப்பட்டறைப் பதிப்பகம்
பதிப்பாசிரியர் : உயர்திரு சேக்கிழார் அப்பாசாமி அவர்கள்
எழுதியவர். : கவிஞர் சரஸ்வதி இராஜேந்திரன் அவர்கள்
நாம் உறங்கும் போது கனவு விழித்துக்கொள்வதும் , நாம் விழிக்கும் போது கனவு
காணாமலும் மறைந்துவிடுவதுண்டு.
இங்கு கவிஞர் சரஸ்வதி ராஜேந்திரன் அவர்கள் கனவு காண்கிறார்!
அதுவும் எப்படி என்றால் வண்ண வண்ணக் கனவுகளில் மிதக்கிறார்.
அளவுகளும் வரையரைகளும் இல்லையாம், அடடா...
அடுக்கடுக்கா கண்டுகொண்டே இருக்கிறார் !
எப்படி இருக்கும்!!!!!
முதல் கனவே , பச்சை கிளியாய் மாறுவோம் !
இச்சைக்கிளியாய் பாடுவோம் என்ற பாட்டுக்கேற்ப - ஜோடி சேர்ந்து , வயல் வரப்பில் காடு மேடுகளில் களித்தே இன்புற்று சுதந்திரமாக பறக்க வேண்டும் , என்பதே!
அடுத்து இளமைகாலத்துக்கு அழைத்துச்செல்கிறது இவரது கனவு !
ஆமா யாருக்குத்தான் ஆசை இருக்காது !
மாடிப்படிகளில் மான்குட்டி போல துள்ளியாடி ஒடவேண்டும்....
துள்ளி குதித்து இறங்கலாம், தாவி ஏறலாம்!
துள்ளி ஆடி , மான்குட்டி போல எப்படி ஒட முடியும் , வேண்டுமென காண்கிறார்.
அலைகள் மோதி ஈரமாக்கி விட்டுச்சென்ற மணல் மீது ,
மனதுக்குப் பிடித்தமான காதலனோடு , நெருக்கமாக அமர்ந்தபடி
அங்கு விற்கும் தேங்காய் , மாங்காய் , சுண்டலை சுவைத்து ரசித்து சாப்பிட வேண்டுமாம் !!
நிச்சயமாக காதலர்களுக்கு ஊக்க மருந்துதான் இந்தக்கவி....ஆனாலும்,
அடுத்து வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலைக்கு தாவுகிறது கனவு !!!
அலைபேசியில் புதுப்பாடல் கேட்டுக்கொண்டே சுற்றவேண்டுமாம் ...ஆனாலும்
ஏழைவீட்டுக்கு , தென்றலோ நிலவு வெளிச்சமோ வர மறுக்குமா ?
என ஒரு பெண்ணுக்காக......
சமூகத்தில் , வலிகள் நிறைந்த , அங்கம் சிறிது குறைந்த ஒரு கன்னிக்கு இதுபோல கனவுகள் வரக்கூடாதா , வந்த கனவுகள் வாழ்க்கையில் கை கூடாதா ??
என தன்னுடைய வேதனையை ,
மனதில் ஒரு முள் குத்தியதுபோல வலியில் சோகம் இழையோடி படர முடித்துள்ளார் இந்த கவிஞர் சரஸ்வதி ராஜேந்திரன் !
எளிய சொற்களில் , அழகான வரிகளில் , அளவோடு வடிவமைக்கப்பட்ட கவிதை!
தமிழ்ப்பட்டறையின் அன்புமிகு சகோதரி , ஆற்றல்மிகு கவிஞர் !
மிகச் சிறந்த எழுத்தாளர் !
சமூகநலச் சிந்தனையோடு எழுதும் ஆற்றல் மிகக்கவர் !
அவர்களை வாழ்த்துவோம் !
வாழ்த்துகள் சகோதரி ! வளர்க தங்களின் எழுத்துலக பணி !!
வாழ்க தமிழ்ப்பட்டறை ! வளர்க தமிழ்ப்பட்டறை பதிப்பகம் !
நன்றி. :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக