புதன், 8 மார்ச், 2017

மெதுவாய் கொல்லும் விஷம் நட்பில்
நட்பென்று சொல்லி ஒன்று
நாவினில் தேனைத் தடவி
நட்ட நடு வீட்டிற்குள்ளே
நல்ல பாம்பாய் நுழைந்தது
அன்புடன் நட்பை விதைத்து
நன்றியுடன் அறுவடை செய்யும்
வயலாய் நினைத்து நல்ல மனம் கொண்டு
நயமாய் ஏற்றேன் அவள் நட்பை
பயனேதும் கருதாதது போல்
பரந்த மனதோடு உலவினாள் உள்ளே
உற்றார் உறவினரைக்கூட நாடவிடாமல்
உடன் பிறவா தோழியாய் தொடர்ந்தாள்
எல்லாமே எனக்கு அவளேயானாள்
நல்லவிதமாய்ஊழியம் செய்தாள்
தோழியான நான் நோய்வாய் பட்டால் கூட
விழி மூடாது உண்ணாது என்னைக் காத்தாள்
பிறகுதான் தெரிந்தது அவள் சுயரூபம்
பதவி வெறியில் பல நாள் திட்டம்
உதவி செய்வதுபோல் நடித்து
பரம யோக்கியமானவள்போல் ஊடுருவி
மெதுவாய் கொன்றாள் விஷ நட்பால்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக