புதன், 8 மார்ச், 2017

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா---22-2==20---பூவோடுகாத்திருக்கும் பூவையிவள்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்22/02/2017ம் நாள்
நடந்து முடிந்த காதல்
கவிதை எழுதும் போட்டியில்
கவிதை எழுதிய கவிஞர்
சரஸ்வதி இராசேந்திரன் ]சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய
அனைத்து பாவலர்களுக்கும்
வாழ்த்துக்கள்
நடுவர் பணியாற்றி சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த
நடுவர் கவிதாயினி சரோஜினி
பாண்டியராஜன்
அவர்களுக்கும் வாழ்த்துக்களும்
நன்றிகளும்
தலைமை நிர் வாகி
ந. பாண்டியராஜன்
*********************************
சான்றிதழ் பெறும் கவிஞர்களுக்கு
ஏனைய கவிஞர்களும் வாழ்த்துச் சொல்லுங்கள்
காதல் சிறப்பித்ழ் சான்றிதழ்
தலைப்பு
பூவோடு காத்திருக்கும் பூவையிவள்
தென்றலைத்தேடுகிறாள் தூதுவிட்டு
பூவோடு காத்திருக்கும் பூவை யிவள்
பூக்கும் நகையின்றி சோர்வுற்றாள்
வாக்கு தந்தவனும் வரவில்லைஅவன்
போக்கும் புரியாமல் புதிரானாள்கன்னி
கண்ணுக்கு இமையின்றி காவல் இல்லை
கன்னி அவளுக்கு நாயகனன்றி சொந்தமில்லை
செம்பவள வாய் அழகி சிந்தைக் கினியவனை
அம்பளவு விழியாlலே தேடி அலைபாய்கிறாள்
பயங்கள் உள்ளுக்குள் அலைமோத
நயனங்கள் நனைகிறது கண்ணீராலே
கன்னியவள் கண்ணீ ரெல்லாம் பன்னீராக
கண்ணனவன் மடியில் பூப்பாள் ஒரு பூவைப்போல
வட்டமிடுகிறது விழிகள் சூரியன் போல
தொட்டதெல்லாம் எட்ட அவன் வருகைக்காக
சென்றவனை எதிபார்த்து வழி பார்த்து
தென்றலைத் தேடுகிறாள் தூது விட்டு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக