புதன், 8 மார்ச், 2017

செய்யுட்கலை சூடிகை---26-12=2016-- தினக்குறிப்பிலிருந்து

கவிஞர் ஏ.எச்.என் நௌசாத் with Saraswathi Rajendran.
13 hrs
இனிய காலை வணக்கங்கள் கவிஞர்களே....
26.12.2016 அன்று நடைபெற்ற செய்யுட்கலை சூடிகையின் "#தினக்குறிப்பிலிருந்து" எனும் தலைப்பில் சிறப்பாக கவியெழுதி
#கவிஞர்_சரஸ்வதிராசேந்தி
அவர்கள் #சூடிகை_சான்றிதழ் பெறுகிறார்....
அவருக்கு குழுமம் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செய்யுட்கலை சூடிகை குழுமம் சார்பில் அகம் மகிழ்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்....
சிறந்த கவிதைகளை தேர்வு செய்த நடுவர் கவிதாயினி #வபீரா_வபீ அவர்களுக்கு மனம் மலர்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...
தினக்குறிப்பை புரட்டுவதே
தித்திப்பான செயல் எனக்கு
அன்றொரு நாள் எனக்குள்
அரும்பிய மொட்டான காதல்
அழகிய பூக்களாக மலர்ந்து
அது தந்த மணம்தான் என்
அன்றைய இனிய இல்லறம்
தூயதோர் காதல்துயரமின்றி அதே
தூய்மையுடன் மூன்றாண்டாய்
தொடரும் அழகு கண்டு யார் கண்
தீண்டியதோ கேடுமன எண்ணங்கள்
தீண்டியது விஷப் பாம்பாய்
தொடர்ந்தது துன்பங்கள்வாழ்க்கையில்
படரும் விஷமாய் படர்ந்து அழித்தது
அர்த்தமுள்ள வாழ்வு அர்த்த மற்றுப் போனது
உதறிய ஆசைகள் வீண் பழியுடன்
சிதறி சின்னா பின்னமாகியது,,
தினக்குறிப்பிலிருந்து அந்த நாட்களை
தூக்கியெறிய முடியாமல் புரட்டி புரட்டி பார்க்கிறேன்
என்னை எடுத்து தன்னைக்கொடுத்த
போனவன் வருவானா என்று!
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக