புதன், 8 மார்ச், 2017

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா------கிராமியக் கவிதைப் போட்டி

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே. 
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
23/01/2017ம் நாள் கருவாச்சியின்
காதல் எனும் தலைப்பில் நடைபெற்ற கிராமியக் கவிதைப்
போட்டியில்
கவிதை எழுதிய கவிஞர்
[ சரஸ்வதி ராஜேந்திரன் ]சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார்
கவிதை எழுதிய
அனைத்து பாவலர்களுக்கும்
வாழ்த்துக்கள் 
நடுவர் பணியாற்றி சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த
கவிதாயினி அபிராமி
ஜெயராமன்
அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தலைமை நிர் வாகி
ந. பாண்டியராஜன்
கருவாச்சியின் காதல்
ஏட்டி கருவாச்சி
எட்டுப்பட்டி இளவரசி
தொட்டுபுட்டே எம் மனசை
கட்டுபட்டேன் நானுனக்கு
மந்தக் காட்டு ஓரத்திலே
மத்தியான வேளையிலே
வந்து நானும் காத்திருக்கேன்
ஒத்தையிலே நீயும் வாடி
கருவாச்சி உன்னாலதான்
உருவாச்சி காதலும்தான்
திருவாயத் திறந்து நீயும்
ஒரு வார்த்தை பேசிவிடு
சட்டிபொட்டி கழுவ வேண்டாம்
சமையலும் செய்ய வேண்டாம்
சட்டமா அமர்ந்து நீயும் என்கூட
சரசமாடினா போதும் புள்ள
வெள்ளையான உன் மனசு
வெல்லம் போல இனிக்குதடி
கள்ளமில்லா என் மனசை
கண்டு நீயும் வரவேண்டுமடி
சங்கு கழுத்துக்கு நான் 
தங்கத் தாலி கொண்டுவாரேன்
மல்லுக்கு நிற்க வரலேஉன்
சொல்லுக்கு காத்திருக்கேன் 
சட்டுபுட்டுனு வந்து நீயும் சம்மதத்தை சொல்லிபோடு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக