புதன், 8 மார்ச், 2017

மெட்டுபோடாததால் பரிசை இழந்த எனது பாடல்
செய்யுட்கலை சூடிகை
காதல்
காதலி காதலி என்னை நீ ஆதரி
நெஞ்சிலே நெஞ்சிலே 
வஞ்சியே உனை வைத்தேன்
கெஞ்சியே நிற்கின்றேன் நீ
நெஞ்சம் மலர்ந்தால் லாபம்
வஞ்சம் செய்தால் மனம் நோகும்
தேனை சிந்தும் நிலவில்
தீயாய் ஏன் சுடுகிறாய்
பூவை சூட்டும் கூந்தலில் என்
ஆவியை அள்ளி ஏன்முடிக்கிறாய் ?
காதலி காதலி
என்னை நீஆதரி
ஏம் பாட்டு உன்
காதில் விழணும்
எங்கே நீ இருந்தாலும்
வரணும் சம்மதம் தரணும்
விழியாலே விதைச்சிட்டு
விவகாரம் பண்ணாம வாடி
உன்னோடு சேராமல் என்
உயிர் ஒன்றும் வாழாது
நான் இருப்பதும் இறப்பதும்
உன்கையில் தானே இருக்கு
பழியை ஏற்காமல்
வழியை காட்டி என்னை
வாழவை பெண்ணே
காதலி காதலி
என்னை ஆதரி
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக